கடந்த 24 மணி நேரத்தில் 20,988 கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய 18,762 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகரிப்பு ஆகும்.
முகநூல் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,786,004 ஆக உள்ளது.
சிலாங்கூர் 4,073 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சரவாக் (2,992), கெடா (2,455), சபா (2,329), ஜோகூர் (2,145), பினாங்கு (1,600), கிளந்தான் (1,247), பேராக் (990), தெரெங்கானு (987), கோலாலம்பூர் (731), பஹாங் (599), மலாக்கா (407), நெகிரி செம்பிலான் (301), பெர்லிஸ் (90), புத்ராஜெயா (37) மற்றும் லாபுவான் (5).























