பிரபல ஜேர்மன் பத்திரிகையில் வெறுமையாக வெளியான ஒரு பக்கம்; பரபரப்பை ஏற்படுத்திய காரணம்

ஜேர்மனியின் பிரபல பத்திரிகை ஒன்றின் ஒரு முழு பக்கமும் நேற்று வெறுமையாக விடப்பட்டிருந்தது.

ஜேர்மனியில் பெரும்பாலானோர் விரும்பிப் படிக்கும் பிரபல பத்திரிகை, Bild என்ற பத்திரிகை. அந்தப் பத்திரிகையின் எட்டாவது பக்கம் நேற்று வெறுமையாக விடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பக்கம் காலியாக விடப்பட்டிருந்ததன் காரணம் என்னவென்றால், ஜேர்மனியில் சேன்ஸலர் தேர்தல் நெருங்கும் நிலையில், பசுமைக் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் Annalena Baerbock என்பவரிடம் அந்தப் பத்திரிகை பேட்டி ஒன்றுக்காக நேரம் கேட்டிருக்கிறது.

ஆனால், Baerbock பேட்டியளிக்க மறுத்திருக்கிறார். ஆகவே, பத்திரிகையின் எட்டாவது பக்கத்தில், This is your page, Ms. Baerbock! (இது உங்களுக்கான பக்கம் திருமதி Baerbock அவர்களே) என்று மட்டும் போட்டுவிட்டு, அந்த பக்கத்தையே வெறுமையாக விட்டுவிட்டிருக்கிறது அந்தப் பத்திரிகை!

தனக்கு பேட்டியளிக்க தனக்கு பொருத்தமான நேரம் கிடைக்கவில்லை என Baerbock கூறியுள்ள நிலையில், இப்படி தேர்தல் நேரத்தில் பேட்டி கொடுக்காத முதல் பசுமைக் கட்சித் தலைவர் Baerbock மட்டும்தான் என Bild பத்திரிகை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here