கோலாலம்பூர்: கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட மலேசியர்கள் தடுப்பூசி செலுத்திய ஏழு நாட்களுக்குள் இரத்த தானம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தேசிய இரத்த மையம் (NBC) தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பெற்றுக்கிண்டவர்களுக்கு ஏதேனும் சிறிய பக்க விளைவுகள் இருந்தால், பக்க விளைவுகளிலிருந்து முழுமையாக குணமடைய ஏழு நாட்கள் தேவை என்றும் அதன் பிறகு அவர்கள் இரத்த தானம் செய்யலாம் என்று NBC தெரிவித்துள்ளது.
ஃபைசர்-பயான்டெக், சினோவாக் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பெறுபவர்கள் இரத்த தானம் தொடர்பான அதன் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்றும் மையம் கூறியது.
இரத்த தானம் செய்பவர்கள் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடுவதையும் NBC மிகவும் ஊக்குவிக்கிறது.
“இரத்த தானம் செய்பவர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் முதலாவது மற்றும் இரண்டாவது அளவிற்க்கு இடையிலான இடைவெளியில் இரத்த தானம் செய்யலாம்” என்று அந்த மையம் தனது அதிகாரபூர்வ முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் கோவிட் -19 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுக்கான இரத்த தானம் செய்வது பற்றிய மேலதிக தகவல்களைப் NBC பகிர்ந்துகொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-பெர்னாமா