மலேசிய இந்திய முஸ்லிம்களால் நடத்தப்படக்கூடிய குத்பா தமிழ் என்ற யூடியூப் சேனல், வருகின்ற ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு தேசிய அளவிலான இணையவழி தமிழ் பேச்சுப் போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில் 10 வயது முதல் 17 வயது வரை உள்ள ஆண் பெண் மலேசிய சிறார்கள் பங்குபெறலாம்.
1.ஒப்பற்ற தலைவர் ஏந்தல் நபி (ஸல்).
2. நபியின் நேசமே எங்களின் சுவாசம்.
3.உலகம் போற்றும் உத்தம நபி (ஸல்).
என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடத்தில் இருந்து 7 நிமிடங்களில் தமிழில் பேசி காணொளி (வீடியோ ) பதிவு செய்து 017-2933047 என்ற எண்ணிற்கு டெலிகிராம் (telegram app) மூலம் அனுப்பவேண்டும்.
காணொளி, அனுப்பவேண்டிய இறுதி நாள் 9 அக்டோபர் 2021. அனுப்பப்பட்ட காணொளிகள் அனைத்தும் நடுவர் குழு மதிப்பீடு செய்து வெற்றியாளர்கள் 19 அக்டோபர் 2021 குத்பா தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.
– வெற்றிபெறும் சிறார்களுக்கு சான்றிதழ் மற்றும் அருமையான பரிசுகள்
> முதல் பரிசு 1000 வெள்ளி
> இரண்டாவது பரிசு 700 வெள்ளி
> மூன்றவாது பரிசு 500 வெள்ளி
> நான்காவது பரிசு 300 வெள்ளி
> ஐந்தாவது பரிசு 200 வெள்ளி வழங்கப்படும்.
பங்குபெறும் அனைத்து சிறார்களுக்கும் E-சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த செய்தியை உங்கள் சொந்தங்கள் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்து நம் சமூகத்தின் சிறார்களை இந்த போட்டியில் பங்குபெற செய்து ஈருலக நன்மையை பெற்றுக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம். மேல் விபரங்களுக்கு 017-2933047 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.