கோவிட்-19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு: தக்கியுதீன் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

கோவிட் -19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதால்  டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹாசன் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து, மக்களவையின் நான்காவது அமர்வின் முதல் கூட்டத்தின் தொடக்கத்தில் நான் திங்கள்கிழமை கலந்து கொள்ளவில்லை.

நான் இந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு வரமாட்டேன்.  நான் உடல் ரீதியாக எனது உத்தியோகபூர்வ கடமைகளை செய்ய மாட்டேன் என்று எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

செப்டம்பர் 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அவரது பிசிஆர் சோதனைகள் எதிர்மறையாக இருந்தபோதிலும், செப்டம்பர் 20 வரை அவர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று தக்கியுதீன் கூறினார். கலப்பின (முறைகள்) வழியாக நான் எனது கடமைகளைச் செய்வேன். இந்த வளர்ச்சியால் ஏற்படும் ஏதேனும் சிரமத்திற்கு வருந்துகிறேன்  என்று அவர் கூறினார்.

தக்கியுத்தீனைத் தவிர, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பாரு பியான் கோவிட் -19 தொற்று உறுதி  செய்த பின்னர் மக்களவை கூட்டத்திற்கு வரவிலைஅமர்ந்திருக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here