பெடரல் நெடுஞ்சாலையில் இரண்டு பேரைக் கொன்றதாகக் கூறப்படும் வாகன ஓட்டுநருக்கு மேலும் தடுப்புக் காவல் நீட்டிப்பு

பெடரல் நெடுஞ்சாலையில் இரண்டு பேரை கொன்றதாக கூறப்படும் ஒரு வாகன ஓட்டுநருக்கு போலீஸ் மூன்று நாட்கள் தடுப்புக் காவலை நீட்டிப்பை பெற்றுள்ளது. ஷா ஆலம் உயர் நீதிமன்ற மூத்த துணைப் பதிவாளர் நோர்லிசா ஹுசின் ரிமாண்ட் உத்தரவு நீட்டிப்பை வழங்கினார்.

செப்டம்பர் 12ஆம் நடந்த விபத்தில், 24 வயதான அந்த நபர் ஃபெடரல் நெடுஞ்சாலையில் கிள்ளான் நோக்கி போக்குவரத்து நெரிசலுக்கு எதிராக ஓட்டி மற்றொரு வாகனத்தில் மோதினார். பிக்-அப் டிரக்கை ஓட்டி வந்த சந்தேக நபர் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  இந்த விபத்தில் மற்றொரு காரில் இருந்த இருவர்-18 வயது பெண் மற்றும் 19 வயது ஆண்-விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 ன் கீழ் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு ஒரு அறிக்கையில், ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் பஹாருதீன் மாத் தைப் கூறினார், சிறுநீர் சோதனைகள் பிக்-அப் டிரக் டிரைவர் மெஜுவானா என்ற போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. மூன்று நாட்கள் நீட்டிக்கப்படுவதற்கு முன்பு அவர் ஆறு நாட்களுக்கு ரிமாண்ட் செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here