கோவிட்-19 தடுப்பூசியை போட்டு கொள்ள மறுக்கும் தனி நபர்கள் மீது சிலாங்கூர் சுல்தான் அதிருப்தி

அல்-குர்ஆன் மற்றும் ஃபர்து ஐன் வகுப்பு (கஃபா) ஆசிரியர்கள், மசூதி கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தடுப்பூசி போட விரும்பாத திருமணத் தம்பதிகளின் பெயர்களைப் பார்த்து சிலாங்கூர் சுல்தான் ஷரபுதீன் இட்ரிஸ் ஷா வேதனையையும் வருத்ததையும் வெளிபடுத்தினார்.

சிலாங்கூர் ராயல் அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் நேற்று பதிவேற்றப்பட்ட அறிக்கையில், சுல்தான் ஷரபுதீன் 873 மத ஆசிரியர்கள், மசூதி மற்றும் திருமண அலுவலர்களில் 203 பேர் மட்டுமே சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டருந்த சிறப்பு முன்னணி தடுப்பூசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்று தனது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தார்.

கலந்து கொண்ட 203 பேரில் 96 பேர் தடுப்பூசி போட மறுத்தனர். தனிநபர்களின் பிடிவாதம் மற்றவர்களுக்கு, குறிப்பாக மதப்பள்ளி மாணவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால்  மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மசூதிகள் மற்றும் மத அலுவலகங்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி விநியோகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை ஜாய்ஸ், சிலாங்கூர் சுகாதாரத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சுல்தான் ஷரபுதீன் கூறினார்.

இதற்கிடையில், மாநில பொது சுகாதாரம், ஒற்றுமை, பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறுகையில், சில முஸ்லிம்கள் தடுப்பூசி போட மறுப்பது மாநிலத்தில் மசூதிகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் சிரமமாக உள்ளது.

தடுப்பூசி போட முஸ்லிம்கள் தயக்கம் காட்டியதால் பள்ளிவாசல்களை மீண்டும் திறக்க முழு ஒப்புதல் பெற முடியவில்லை. ஏனெனில் பள்ளிவாசல் அதிகாரிகள் தடுப்பூசி போட விரும்பவில்லை. இது மிகவும் வருத்தமாக உள்ளது என்று சித்தி மரியா நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஜாயிஸ் இயக்குனர் முகமட் ஷாஜிஹான் அகமது கூறியதாவது: காலை 11 மணிக்கு தடுப்பூசி திட்டத்தில் கலந்து கொண்ட 146 நபர்களில், 20 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற ஒப்புக்கொண்டனர்.

சிலாங்கூர் சுகாதாரத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை கஃபா ஆசிரியர்கள், மசூதி அதிகாரிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் மற்றும் திருமண உதவி பதிவாளர்கள் மொத்தம் 872  பேர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here