படகு விபத்தில் பலியான ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு

பியூஃபோர்ட்: செப்டம்பர் 22 அன்று தேனோம், கம்போங்  கலந்தோஸ் பாங்கி, சுங்கை படாஸ் என்ற இடத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 55 வயது முதியவரின் உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

சபா தீ மற்றும் மீட்பு துறை செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குனர் மிஸ்ரன் பிசாரா இச்சம்பவம் பற்றி கூறுகையில், பாதிக்கப்பட்டவரான ஜோசப் சாயாவின் உடல் காலை 7.50 மணிக்கு இங்குள்ள கம்போங் பத்து 64 இல் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

மேலும் இப்படகு விபத்தில் உயிரிழந்த வயது சிறுவனின் உடலும், சுங்கை படாஸ் பத்து 60 இல் வியாழக்கிழமை பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை நடந்த சம்பவத்தில், சுங்கை படாஸில் நான்கு நபர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது என்றும்  அதில் இருவர் நீச்சல் அடித்து பாதுகாப்பான சென்றனர், மேலும் இருவர் வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டனர் என்றும் அவ்விருவரது சடலங்களும் மீட்கப்பட்டது என்றும் அவர் கூறினார் .

 

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here