சக கைதியை அடித்து கொன்றதாக இரு கைதிகள் மீது குற்றச்சாட்டு

கடந்த மாதம் சக கைதியை அடித்து கொன்றதாக இரண்டு கைதிகள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுரா முஸ்தபா 39, மற்றும் அஜீஸுல் டேனியல் முஹம்மது 35, ஆகியோர்  கூட்டாக சேர்ந்து ஹமித்தி கமாருதீன் (48) என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆகஸ்ட் 21 மதியம் 2 மணியளவில் மாராங் சிறைச்சாலையில் இக்குற்றம் புரிந்தனர் எனவும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304 (a) ன் கீழ் அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் வகையான குற்றச்சாட்டாகும்.

நீதிபதி நூரியா ஒஸ்மான் நவம்பர் 3 -ம் தேதி அடுத்த விசாரணைக்கு உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் யாரும் பிரதிநிதித்துவம் செய்யப்படாத நிலையில், துணை அரசு வழக்கறிஞர் இந்தான் நோர் ஹில்வானி மாட் ரிஃபின் மூலம் வழக்குத் தொடரப்பட்டது.

இதற்கிடையில், மாராங் மாவட்ட போலீஸ் தலைமை துணைத் தலைவர் முகமட் ஜெய்ன் மாட் டிரிஸ் ஒரு அறிக்கையில் விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரை வெறும் கைகளால் தாக்கியதாகக் கண்டறியப்பட்டது. இதனால் அவர் பலத்த காயமடைந்தார்.

ஆகஸ்ட் 26 அன்று இங்குள்ள சுல்தானா நூர் ஸாஹிரா மருத்துவமனையில், தலை மற்றும் மார்பில் ஏற்பட்ட காயத்தால், பாக்டீரியா தொற்று  சிக்கல்கள் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here