4 பேரை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட பயங்கரம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நான்கு கடத்தல்காரர்களைக் கொன்று அவர்களின் உடல்களைத் தாலிபான்கள் கிரேன்களில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கனில் இருந்நது அமெரிக்கப் படைகள் வெளியேற பிறகு இப்போது தாலிபான்களின் ஆட்சியே அங்கு நடைபெற்று வருகிறது. அவர்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர்.

முன்பு இருந்த ஆட்சியைப் போல இருக்காது என்றும் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு ஆட்சியாகவே இது இருக்கும் என்றும் தாலிபான்கள் கூறி வருகின்றனர். ஆனால், தாலிபான்கள் சொல்வது ஒன்றாகவும் செய்வது மற்றொன்றாகவுமே உள்ளது.

அங்கு பல்வேறு இடங்களிலும் கடுமையான சட்டங்கள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல பெண்களுக்கு புர்கா கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. புர்கா அணியாமலும் ஆண் துணை இல்லாமலும் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு செயலை தாலிபான்கள் செய்துள்ளனர். அதாவது ஹெராட் என்ற நகரில் 4 இளைஞர்களைக் கொன்ற தாலிபான்கள், அவர்களது உடலை கிரேனின் பின் பக்கம் தொங்கவிட்டு, நகரின் முக்கிய பகுதிகளில் அந்த கிரேன்களை நிறுத்தியுள்ளனர்.

அவர்கள் 4 பேரும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களது உடல்களை இப்படி பொது இடங்களில் தொங்கவிடுவது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்று ஹெராட் நகரின் துணைநிலை ஆளுநர் மவ்லவி ஷிர் அகமது முஹாஜிர் தெரிவித்துள்ளார்.அந்த 4 பேரின் உடல்கள் கிரேனின் பின் பகுதியில் தொங்குவது போன்ற படங்களைத் தாலிபான்கள் இணையத்திலும் பதிவிட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது இஸ்லாமிய நாடு. இங்கு யாரும் யாரையும் காயப்படுத்தக் கூடாது. கடத்துவது மிகப் பெரிய குற்றம். அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எங்கு இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்றாலும் இதேபோன்ற கடுமையான தண்டனை வழங்கப்படும் மற்றவர்கள் யாரும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அவர்களை எச்சரிக்கும் வகையிலே இப்படி பொது இடங்களில் சடலங்கள் தொங்க விடப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார். மேலும். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here