விண்வெளியில் ‘அதிசயம்’- சிலிர்க்க வைக்கும் நாசா புகைப்படம்

விண்வெளி என்பது பல ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்ட சுரங்கம். அதன் அழகே தனி, அப்படிப்பட்ட ஒரு புகைப்படம்தான் நாசா வெளியிட்டதில் நெட்டிசன்கள் சந்தோஷ அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

நாசா விண்வெளியின் அதிசயங்களை நாசா அவ்வப்போது புகைப்படமாக அனுப்பி வைக்கிறது. இப்படித்தான் இந்த போட்டோவும் தற்போது வைரலாகியுள்ளது. விண்வெளியின் ஆழமான இருள் பின்னணியில் கை போன்ற ஒரு வடிவம் பொன்னிறத்தில் தெரிய அதைஅப்படியே புகைப்படமாக்கி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது நாசா. கை போன்ற அந்த வடிவம் கடவுளின் கை (hand of God). வானில் மேகங்கள் சில வேளைகளில் பல்வேறு வடிவங்களை எடுக்கும். அதே போல் எங்கிருந்தோ ஒன்றுமில்லாததிலிருந்து இந்தக் கை வந்தால் அது கடவுளின் கைதான்.

இந்த வடிவம் ஆற்றலும் நுண் துகள்களும் அடங்கிய நெபுலா என்கின்றனர் விஞ்ஞானிகள். ஒரு நட்சத்திரம் வெடித்து உருவாகையில் அதனால் விட்டுச் செல்லப்படும் பல்சாரிலிருந்து புறப்படுவதுதான் இப்படிப்பட்ட வடிவங்கள். இந்த பல்சார் 19கிமீ சுற்றுப்பரப்பு கொண்டது. இதன் அதிசயம் என்னவெனில் இந்தப் பல்சார் தன்னைத்தானே விநாடிக்கு 7 முறை சுற்றுகிறது. இது பூமியிலிருந்து 17,000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here