கல்வியை நோக்கமாக கொண்ட மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு, உரிய அனுமதி கடிதங்கள் இருக்க வேண்டும்; போலீஸ் தகவல்

கோலாலம்பூர்: பள்ளி அல்லது கல்வி நிறுவனங்களுக்கு மாநிலங்களுக்குச் செல்ல விரும்புவோர் கல்வி அமைச்சகம் அல்லது அந்தந்த பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் சான்றளிக்கப்பட்ட கடிதத்தை வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறை கூறுகிறது.

புக்கிட் அமான் உள் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குநர் டத்தோ ஹசானி கஜாலி இது தொடர்பில் கூறுகையில், சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்களை வைத்திருக்க வேண்டும் என்றார்.

“சுலபமான பயணத்தை உறுதி செய்வதற்காக போலீஸ் சாலைத் தடைகள் வழியாக செல்லும் போது, அந்தக் கடிதம் காட்டப்பட வேண்டும்.

“தேசிய பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தினசரி இயக்கத்திற்கான நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் “கல்வி அமைச்சகம் அல்லது பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களால் சான்றளிக்கப்பட்ட கடிதத்தைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாணவர்கள் மாநில எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.

அத்தோடு, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பள்ளிகளுக்கோ அல்லது கல்வி நிறுவனங்களுக்கோ தமது பிள்ளைகள் பயணிக்கும் போது அவர்களுடன் சேர்ந்து பயணிக்கலாம்” என்றார்.

கற்பித்தல் அல்லது கற்றல் (PdP) நோக்கத்திற்காக மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கல்வி அமைச்சகம் அல்லது பள்ளிகள் மற்றும் நிறுவனங்களால் சான்றளிக்கப்பட்ட கடிதங்களையும் கொண்டிருக்க வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து “விடுதிக்குச் செல்லும் மாணவர்கள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கடிதங்கள் இருந்தால், மாநிலங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here