சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 11,889 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,257,584 ஆக உள்ளது.
சரவாக் அதிகபட்சமாக 2,413 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சிலாங்கூர் (1,568), ஜோகூர் (1,217), பேராக் (959), சபா (872), கிளந்தான் (858), பகாங் (831), பினாங்கு (779), கெடா (710), தெரெங்கானு (699), மலாக்கா (378), கோலாலம்பூர் (289), நெகிரி செம்பிலான் (197), பெர்லிஸ் (81), புத்ராஜெயா (36) மற்றும் லாபுவான் (2).