5 நாட்களுக்கு முன்பு இறந்ததாக நம்பப்படும் தாயின் சடலத்துக்கு அருகில் ஊனமுற்ற அவரது பிள்ளை கண்டுபிடிக்கப்பட்டது

கோலாலம்பூர்: ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்ததாகக் கருதப்படும் அவரது தாயின் சடலத்தின் அருகில் ஊனமுற்ற அவரது பிள்ளை (OKU) கண்டுபிடிக்கப்பட்டது.

பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷம்சுடின் மமத் இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்தபோது , தெங்கு ரோஸ் மாவார் தெங்கு சைஃபுல் முனீர் (21) என்ற ஊனமுற்ற பிள்ளையே இறந்த ருஸ்னா அபு ஹடனின் (61) என்பவரின் சடலத்துக்கு அருகில் பலவீனமான நிலையில் காணப்பட்டார்.

“தாயாரின் இறப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை மற்றும் தெங்கு ரோஸ் மாவார் சிகிச்சைக்காக பாலிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இறந்த ருஸ்னாவின் உடல் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்த சுங்கை பட்டாணியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மேலும் “இறப்புக்கான காரணம் குறித்த அறிக்கையை நாங்கள் சுகாதார அமைச்சகத்திடமிருந்து இன்னும் பெறவில்லை.” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here