சிங்கப்பூரில் 2,356 பேருக்கு கோவிட் தொற்று – 4 பேர் உயிரிழந்தனர்

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் தனது தடுப்பூசி போடப்படாத குடிமக்களில் 55 முதல் 80 வயதிற்குட்பட்ட 4 பேர் கோவிட் -19 உடன் தொடர்புடைய சிக்கல்களால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், உயிரிழந்த  மூன்று பெண்களும் ஒரு ஆணும் – பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைகளைக் கொண்டிருப்பதாகக் கூறியது.

சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107-ஆக உயர்ந்து, தொடர்ந்து 13-ஆவது நாளாக கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் 18 பேருடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 40 பேர் கோவிட் -19 நோயால் இறந்துள்ளனர்.

தகவல்களின் அடிப்படையில், 1,938 சிங்கப்பூரியர்களுக்கு புதிய தொற்றுக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர் விடுதிகளில் 412 புதிய தொற்று மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஆறு தொற்றுகள் உட்பட 2,356 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் நேற்று பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 101,786 ஆக உள்ளது. ஏறக்குறைய 4.5 மில்லியன் மக்கள், அல்லது 82% மக்கள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள். 85% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here