கேக் விற்பனை செய்வதாக கூறி, வாடிக்கையாளரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது

பியூஃபோர்ட்: கேக்குகளை ஆர்டர் செய்த வாடிக்கையாளரை, ஏமாற்றியதாக 43 வயதான பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் நேற்று மாலை 7 மணியளவில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட போலீஸ் தலைமை துணை அதிகாரி யூசோப் ஜக்கி மாட் யாகோப் கூறுகையில்,கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு கிலோவிற்கு 58 வெள்ளி அடிப்படையில் 10,000 துண்டுகள் பாரம்பரிய முறையில் தயார் செய்யும் கேக்குகளை விற்பதற்கு முன்வந்தது தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர் அந்த கேக்குகளை வாங்குவதற்காக, கட்டம் கட்டமாக பணத்தை விற்பனையாளரான சந்தேக நபரின் வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டார். பாதிக்கப்பட்டவர் மொத்தமாக 13,610 வெள்ளியை வைப்பிலிட்டுள்ளார்.

“அவர் செலுத்திய பணம் கேக் செய்வதற்கான பொருட்கள் மற்றும் கொள்கலன்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

“எனினும், பாதிக்கப்பட்டவரின் அறிக்கையின்படி, அவர் கூறிய எந்த பொருட்களையும் அவர் பெறவில்லை,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு, மோசடி குற்றவியல் பிரிவு 420 இன் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யூசோப் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here