பிரிட்டனில் இருந்து டெல்லி அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த 700 பயணிளுக்கு, 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்

பிரிட்டனில் இருந்து டெல்லி அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த 700 பயணிகள், 10 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் பயணிகள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போட்டிருந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என பிரிட்டன் அரசு அறிவித்தது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

இந்த விவகாரத்திற்கு பதிலடி தரும் விதமாக, பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் பயணிகள், கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என, மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, பிரிட்டன் குடிமக்களுக்கான ‘பரஸ்பர நடவடிக்கைகளின்’ கீழ் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இந்திய அரசின் புதிய விசா நிபந்தனைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்துள்ள 700 பயணிகளும் 10 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மூத்த அதிகாரிகள் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை பிற்பகல் வரை பிரிட்டனில் இருந்து மொத்தம் மூன்று விமானங்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தன. அதில் பிரிட்டன் குடிமக்கள் உட்பட சுமார் 700 பயணிகள் பயணம் செய்தனர். புதிய விதிகளின்படி, அனைத்துப் பயணிகளும் கட்டாய ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு அவர்களது வீட்டிலோ அல்லது அவர்கள் செல்லும் இடத்திலோ 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தச் செயல்முறையை நடைமுறைபடுத்துவதற்காக டெல்லி அரசாங்கத்தின் குழு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழு டெல்லிக்கு வரும் பயணிகள் செல்லும் டெல்லி முகவரியைப் பெறுவது, மருத்துவர்கள் அவர்களைப் பரிசோதனை செய்வது போன்ற நடைமுறைகளை மேற்கொள்கின்றன. அதன் பிறகு செல்ல அனுமதிக்கப்படும் நபர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளைப் பின்பற்றுகிறாரா, இல்லையா என்பதையும் மற்றொரு குழு சரிபார்க்கும்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here