கோத்த கினபாலு மங்காதல் தாமான் இண்டா பெர்மாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று இரவு ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. கோத்த கினாபாலு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜார்ஜ் அப்துல் ரஹமான் கூறுகையில் இரவு 7 மணியளவில் குழந்தை பிறந்ததாக நம்பப்படுகிறது.
குழந்தை 30 வயதிற்குட்பட்ட நபரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப விசாரணையில் அவ்வாடவர் ஒரு பூனை என்று முதலில் கருதியகாவும் பிறகு ஒரு சிணுங்கும் ஒலியைக் கேட்டதாகவும் கூறினார். குழந்தையை கண்டவுடன் அதிர்ச்சியடைந்த நபர் சம்பவத்தை தெரிவிக்க உடனடியாக MERS 999 அவசர அழைப்பு மையத்தை அழைத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் நடவடிக்கைக்காக குழந்தையை ஆம்புலன்ஸ் குழுவிடம் ஒப்படைத்தனர் என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
குழந்தையை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக லிகாஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு (HWKKS) அனுப்பியதாக ஜார்ஜ் கூறினார். சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குழந்தையை கைவிட்ட குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 317 இன் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.