எனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணை பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்கிறார் ஜோகூர் மாநில போலீஸ் தலைமை அதிகாரி

ஜோகூர் பாரு: சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணின் மூலம், மாவட்ட காவல்துறைத் தலைவர்களின் தவறான நடத்தைகள் குறித்து தனக்கு சில இனம்தெரியாத தரப்புகளிடமிருந்து பல கடிதங்கள் வந்ததாக, ஜோகூர் மாநில போலீஸ் தலைமை அதிகாரி டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை வெளிப்படுத்தினார்.

“இந்த இனந்தெரியாத தரப்பினரின் கடிதங்களிலிருந்து வரும் தகவல்கள், அவை முறையானவையாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் நான் ஆராய்வேன்.

நேற்று ஜோகூர் உழவர் அமைப்பு ஆணையத்தில் (LPP) நடந்த உரையாடலின் போது, அவர் மேலும் “எனக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் நான் நடவடிக்கை எடுப்பேன்” என்றும் கூறினார்.

அயோப் கானின் கூற்றுப்படி, அவர் தனது தனிப்பட்ட எண் மூலம் பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் தகவல்களைப் பெறுகிறார்.மேலும் ரெய்டுகள் அல்லது கைதுகள் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு முன், கொடுக்கப்பட்ட தகவல்கள் முதலில் ஆராயப்படும் என்றார்.

“சிலர் தங்கள் தனிப்பட்ட தொடர்பு எண்ணைப் பகிர்வதை விரும்புவதில்லை, ஏனெனில் அது அவர்களைத் தொந்தரவு செய்கிறது, ஆனால் என்னைப் பொறுத்தவரை அது பெரிய பிரச்சனை அல்ல.

“எனது தனிப்பட்ட தொடர்பு எண்ணை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வதில் எனக்கு என்ன தீங்கு இருக்கிறது, ஏனென்றால் அங்குதான் எனக்கு நிறைய தகவல்கள் கிடைக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஜோகூர் பாரு செலாத்தானில் ஒரு இரவு கிளப் மிகவும் சத்தமாக இருப்பதாக யாரோ ஒருவர் எனக்கு செய்தி அனுப்பினார்.

“அவ்வாறு எனக்கு தகவல் வந்த போது, அப்பகுதியில் உள்ள மாவட்ட காவல்துறைத் தலைவரைச் சரிபார்க்க நான் உடனடியாக உத்தரவிட்டேன், அங்கு 26 பேர் கொண்ட ஒரு நைட் கிளப் திறக்கப்பட்டிருந்தது. அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் எதிராக SOP மீறலுக்காக மொத்தமாக 150,000 வெள்ளி அபராத அறிவிப்பு போலீசாரால் வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

மக்கள் எப்பொழுதும் போலீஸை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், போலீசுக்கு தகவல் அனுப்பப்படும் போது “kowtim” கலாச்சாரம் நடைமுறையில் இருக்கிறதா என்று பார்க்க விரும்புவதாக அவர் கூறினார்.

“போலீசிற்கு தகவல் கொடுக்கப்பட்ட பின்னர், ​​அதைத் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் அதில் ஏதோ ஊழலின் ஒரு கூறு இருப்பதாக பொதுமக்கள் எண்ணக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here