நவம்பர் 15ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு (tourist visa) விசா விநியோகம் மீண்டும் ஆரம்பம் ; இந்திய அரசு அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் (tourist visa) விசா வழங்கும் தேதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, chartered விமானங்களில் இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அக்டோபர் 15 முதல் (tourist visa) விசா வழங்கப்படும்.

மேலும், வழக்கமான விமானங்களில் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவம்பர் 15ஆம் தேதி முதல் (tourist visa) விசா வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், அவர்களை அழைத்து வரும் விமானங்களும், சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அனைத்து கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு வெளிநாட்டினருக்கு கடந்த ஆண்டு முதல் (tourist visa) விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும், சர்வதேச பயணங்களுக்கு இந்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here