காலை உணவை சீக்கிரம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயத்தை தடுக்க முடியுமா?

சரியான நேரத்தில் காலை உணவை சாப்பிடுவதும் முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். காலை உணவை தவறாமல் எடுத்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாக மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றலை நாம் சாப்பிடும் காலை உணவே பூஸ்ட்டப் செய்கிறது. காலை உணவை தவிர்ப்பதால் அல்சர்( ulcer) உட்படகுடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு இருக்கும் அதே நேரத்தில், சரியான நேரத்தில் காலை உணவை சாப்பிடுவதும் முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தாமதமாக எழுந்து காலை உணவை சாப்பிடுவது அல்லது சீக்கிரமே எழுந்ததும் காலை உணவை குறித்த நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது உள்ளிட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் காலை தாமதமாக எழுந்து சாப்பிடுபவர்கள், சீக்கிரமாக காலை உணவை முடிக்கத்தார்கள் ஆகியவர்களோடு ஒப்பிடுகையில் சீக்கிரம் எழுந்திருப்பதோடு காலை உணவுயும் சீக்கிரமே முடிப்பவர்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் சிறந்த ரத்த சர்க்கரை அளவையும் கொண்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

ENDO 2021 எனப்படும் எண்டோகிரைன் சொசைட்டியின் விரிச்சுவல் கான்ஃபிரன்ஸில் இது தொடர்பான ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. எண்டோகிரைன் சொசைட்டி ஜர்னலில் ஆய்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆய்வின் ஆராய்ச்சி முடிவுகள் காலை உணவை சீக்கிரமே எடுத்து கொள்வது குறைந்த இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்கான குறைந்த ஆபத்துடன் தொடர்புடையது என்பதை காட்டி உள்ளது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான டாக்டர் மரியம் அலி, காலை உணவை நேரத்தோடு சாப்பிட்டவர்களுக்கு குறைவான இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நல்ல ரத்த சர்க்கரை இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் எப்படி கவனித்தனர் என்பதை வெளிப்படுத்தினார்.

 

காலை உணவை சாப்பிடும் நேரம் மற்றும் ரத்த சர்க்கரை & இன்சுலின் அளவுகளுக்கு இடையேயான தொடர்பை கண்டறிய மரியம் அலியும் அவரது குழுவினரும் சுமார் 10,575 அமெரிக்கர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட டேட்டாக்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது, 10 மணிநேரம் ஈட்டிங் விண்டோ முறையில் சாப்பிடுவது, ஒவ்வொரு நாளும் குறைவாக சாப்பிடுவது உள்ளிட்ட பழக்கங்கள் அதிக இன்சுலின் எதிர்ப்புடன் இணைக்கப்பட்டது.

சுருக்கமாக சொன்னால் நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பவர்கள் இன்சுலினுக்கு குறைவாகவே பதிலளிப்பார்கள், இது டைப்-2 நீரிழிவு நோயை உருவாக்கும் ஆபத்து காரணியாக மாறும் என்று மரியம் அலி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் முந்தைய ஆராய்ச்சிகளுக்கு மாறாக இருந்தது. இந்த ஆய்வு உண்ணாவிரதம் இன்சுலின் சென்ஸிட்டிவை மேம்படுத்தலாம் மற்றும் ஒரு நபரின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவித்தது.

இருப்பினும் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், 8:30 மணிக்கு முன் காலை உணவை சாப்பிட்டால் அவர்களுக்கு குறைந்த அளவு இன்சுலின் எதிர்ப்பு இருந்தது என்றும் மரியம் அலி தெரிவித்தார். மேலும் தங்களது ஆய்வு கண்டுபிடிப்புகள் உண்ணும் நேரம், காலத்தை விட வளர்சிதை மாற்ற நடவடிக்கைகளுடன் வலுவாக தொடர்புடையது என்பதை காட்டுவதாகவும் அவர் கூறி இருக்கிறார். அதிகரித்த தாகம், பசி, சோர்வு, மங்கலான பார்வை, அடிக்கடி சிறுநீர் கழித்தல் உள்ளிட்டவை டைப் -2 நீரிழிவு நோயின் அறிகுறிகள். இது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் அவரது உடல் இன்சுலின் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஒரு வாழ்நாள் நோய் ஆகும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here