2021ஆம் ஆண்டின் அமை­திக்­கான நோபெல் பரிசு இரு நாட்டு செய்தியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்­டது

2021ஆம் ஆண்டின் அமை­திக்­கான நோபெல் பரிசு, பிலிப்­பீன்ஸ், ர‌ஷ்ய செய்­தியா­ளர்­க­ளுக்கு நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

அமைதி, ஜன­நா­ய­கத்­திற்­கான அடிப்­ப­டை­யாக கருத்து சுதந்­தி­ரம் இருப்­பதை வலி­யு­றுத்­தி­ய­தற்­காக பிலிப்­பீன்­சைச் சேர்ந்த செய்­தி­யா­ளர் மரியா ரெஸ்­ஸா­வுக்­கும் ரஷ்­யா­வைச் சேர்ந்த செய்­தி­யா­ளர் டிமிட்ரி முர­டோ­வுக்­கும் அமை­திக்­கான நோபெல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்­டது.

இவர்­கள் இரு­வ­ரும், தங்­கள் கொள்­கை­யில் உறு­தி­யாக நிற்­கும் செய்­தி­யா­ளர்­க­ள் என்றும் அனைவரின் பிர­தி­நி­தி­களாக உள்ளனர் என்று நோபெல் தேர்வுக் குழு குறிப்­பிட்­டுள்­ளது.

“ராப்­ளர் என்ற செய்தி தளத்­தின் துணை நிறு­வ­ன­ரான மரியா ரெஸ்ஸா, பிலிப்­பீன்­சில் வளர்ந்து வரும் சர்­வா­தி­கா­ரத்தை, அதி­கார துஷ்­பி­ர­யோ­கத்தை அம்­ப­லப்­ப­டுத்த தனது கருத்து சுதந்­தி­ரத்­தைப் பயன்­ப­டுத்­தி­னார்.

“நோவாஜா கெஜெட்டா என்ற செய்­தித்­தா­ளின் துணை நிறு­வ­ன­ரான டிமிட்ரி முர­டோவ், பல ஆண்­டு­க­ளாக கடும் சவா­லான சூழ்­நி­லை­யில் ரஷ்­யா­வில் கருத்து சுதந்­தி­ரத்­தைப் பாது­காத்து வந்­த­வர்,” என்று நோபெல் தேர்­வுக் குழு பாராட்டி உள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here