சமூக வலைதளங்களில் வைரலான ஒரு சண்டைக்காட்சி காணொளி தொடர்பில், மூவர் கைது

கோலாலம்பூர் : சமூக வலைதளங்களில் வைரலான ஒரு சண்டைக்காட்சி காணொளியினை தொடர்ந்து, புக்கிட் பிந்தாங், ஜாலான் சாங்காட்டில் உள்ள ஒரு வளாகத்தில் நடந்த சண்டையின் விசாரணைக்கு உதவும் பொருட்டு மூன்று பேரை போலீசார் கைது செய்தனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயா கூறினார்.

டுவிட்டர் கணக்கின் உரிமையாளர் @NanManjoi8715 பதிவேற்றிய சண்டையின் சம்பவத்தைக் காட்டும் முறையே 37 மற்றும் 27 வினாடிகள் நீடிக்கும் இரண்டு வீடியோக்களை காவல்துறையினர் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

இது தொடர்பாக, டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவு அந்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தியது, அதனைத்தொடர்ந்து 32 முதல் 52 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்தனர் .

“குற்றவியல் சட்டம் பிரிவு 148 ன் கீழ் விசாரிக்கப்படும் இந்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் நேற்று முதல் இன்று வரை இரண்டு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

விசாரணை முடிந்தவுடன் இந்த வழக்கின் விசாரணை அறிக்கை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதே நேரத்தில் பொதுமக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் காணொளிகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் (IPD) யை 03-26002222 அல்லது கோலாலம்பூர் போலீஸ் ஹாட்லைனை 03-21159999 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here