கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோவிட்-19 க்கு எதிராக சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசிகளின் இரண்டு டோஸையும் செலுத்திக்கொண்ட இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனூடாக கனடாவிற்கு செல்லும் போது, அவர் பிரிட்டனின் ஹீத்ரே விமானநிலையத்தில் வைத்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இவர் பயணிப்பதற்கு முன்னர் PCR மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பயண ஆவணங்களையும் முறையாக வைத்திருந்தார். இருப்பினும் அவர் திருப்பி அனுப்பப்பட்டதன் காரணம் அவர் சீனாவின் தயாரிப்பான சினோபார்ம்(sinopharm) தடுப்பூசியை கனடா அங்கிகரிக்காததே ஆகும்.
மேலும் கனடாவுக்குள் நுழையும் அனைத்து பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், கனடா அரசினால் அங்கீகரித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களை மாத்திரமே கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கிறது.
அந்த வகையில் Pfizer-BioNTech ,Moderna, AstraZeneca, Janssen/Johnson & Johnson போன்ற தடுப்பூசிகளை மாத்திரமே கனடா அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.