ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பிடித்தது மலேசியா

கோலாலம்பூர்: மலேசியா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 2022-2020 காலத்திற்கு 183 வாக்குகளை பெற்று 18 இடங்களில் ஒன்றை வெற்றி பெற்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு   தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனது முகநூல் பதிவில் பகிர்ந்துள்ளார்.

“ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இடம் பிடிப்பதில் மலேசியாவின் வெற்றி ஒரு பெரிய சாதனை மற்றும் மனித உரிமைகளின் நிலையை பேணுவதில் மலேசியாவிற்கு கிடைத்த அங்கீகாரம்” என்றும் இஸ்மாயில் கூறினார்.

சமரசம், ஒத்துழைப்பு மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு மலேசியா தீவிரமாக செயல்பட தயாராக உள்ளது என்றார்.

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி, உலகளாவிய மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க மலேசியா ஐநா உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக செயல்படும்.

“கோவிட் -19 க்குப் பிறகு அனைத்து நாடுகளும் நீடித்த ஒற்றுமையுடன் மற்றும் மனிதாபிமானத்துடனான மீட்புக்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் மனித உரிமைகள் மையமாக இருக்க வேண்டும் “என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here