கோலாலம்பூர்: நேற்றுவரையுள்ள தரவுகளின் அடிப்படையில், நாட்டிலுள்ள பெரியவர்கள் மொத்தம் 21,399,802 பேர் அல்லது 91.4 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியை முடித்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெரியவர்களில் 95.1 விழுக்காட்டினர் அல்லது 22,260,137 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பதாக அமைச்சகம் தனது கோவிட்நவ் (CovidNow) போர்ட்டலில் தெரிவித்தது.
நேற்றைய தினம் 174,732 டோஸ்கள் வழங்கப்பட்டதாகவும், தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் (PICK) கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 46,633,404 ஆகக் கொண்டு வந்ததாகவும் அது கூறியுள்ளது.
12 முதல் 17 வயது வரையிலான பதின்ம வயதினர் 637,079 பேர் அல்லது 20.2 விழுக்காட்டினர் முழுமையாக போட்டுக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 77.5 விழுக்காட்டினர் அல்லது 2,439,737 பேர் குறைந்தபட்சம் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.