குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை கொடுங்கள்

குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் ஆரோக்கியமான உணவுகளை வித்தியாசமான முறையில் நீங்கள் தயார் செய்து கொடுக்கும்போது, அந்த உணவை சாப்பிட்ட மகிழ்ச்சியிலேயே நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பார்கள்.

இதேவேளை குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் உணவுகள் அவர்களுக்கு ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கவேண்டும். அப்படியான உணவுகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க…

தானியங்கள் – நார்ச்சத்து உணவுகள் (Cereal) : குழந்தைகளுக்கு எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொடுப்பதை காட்டிலும், நார்ச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகளான தானியங்களை சமைத்து கொடுப்பது நல்லது. செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தாத இந்த உணவுகள், அவர்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

  நீர் சத்து பழங்கள் (Water Fruit) :  தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், சுரைக்காய், நீர்ப்பூசணிக்காய் உள்ளிட்டவைகளை தின்பண்டங்களாக, (snacks) உணவுகளிலும் சேர்த்துக் கொடுக்கலாம். உடலில் நீர்ச்சத்து மிக மிக அவசியம். குழந்தைகள் அதிகமாக விளையாடுவார்கள் என்பதால், போதுமான நீரை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால், குடிநீருக்கு இணையாக இதுபோன்ற பழங்களை, அன்றாடம் காலை மற்றும் மாலைப் பொழுதுகளில் பெற்றோர்கள் கொடுத்தால், குழந்தைகள் ஆக்டிவாக இருப்பார்கள்.

கிரீக் யோகர்ட் (Greek Yoghurt) : கிரீக் யோகர்ட் என்பது, பாலை நன்றாக சுட வைத்து, ஆடை சிதைவுறாமல் ஏற்கனவே இருக்கும் கிரீக் யோகர்ட்டின் சிறு பகுதியை சேர்த்து வெதுவெதுப்பான நீரில் சுமார் 8 முதல் 12 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பின்பு, குளிர்சாதனப் பெட்டியில் (refrigerator) 4 மணி நேரம் வைத்து, அதன்பிறகு சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

ஓட் மீல் (Oatmeal) : குழந்தைகளுக்கு காலைநேரத்தில் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு ஓட்மீல். புரதச்சத்து மற்றும் போதுமான ஊட்டச்சத்துகள் நிரம்பியிருக்கிறது. வெறுமனே ஓட்மீலை மட்டும் கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காமல் கூட போகலாம். பாதாம், முந்திரி, கருப்பு திராட்சை ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தால், ஆர்வமாக சாப்பிடுவார்கள்.

மீன் (Fish) : சால்மன் (Salmon) எனப்படும் மீன் வகையில் ஓமேகா 3 ஆசிட் நிறைந்திருக்கிறது. இதனை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. இவை தவிர முட்டை, பிராக்கோலி மற்றும் நட்ஸ்களான பேரிட்சை, பாதாம், முந்திரி உள்ளிட்டவைகளும், அவர்களுக்கு கொடுக்கும் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here