மைடின் பேரங்காடிகளில் இந்திராவேலி முத்திரை அரிசி வகைகள்

நாட்டில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சமையல் பொருட்கள் என அனைத்து வகைப் பொருட்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் மைடின் பேரங்காடியில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் Indravalley (இந்திராவேலி) முத்திரை அரிசி வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்திராவேலி என்பது மலேசிய வர்த்தக முத்திரை ஆகும். நாங்கள் இந்த முத்திரையின் கீழ் 2 வகையைச் சேர்ந்த அரிசிகளை விற்பனைக்கு வைத்துள்ளோம். அதில் ஒன்று பாஸ்மதி அரிசி, மற்றொன்று பொன்னி அரிசியாகும். இந்த பாஸ்மதியில் 3 பிரிவு, பொன்னி அரிசியில் 2 பிரிவுகள் (பச்சரிசி, புழுங்கல் அரிசி) உள்ளன என்று அதன் வெளியீட்டாளரான ஜெசிகா சுப்பையா தெரிவித்தார்.

அன்றாட சமையலுக்கு மட்டுமன்றி பெருநாள் காலங்களுக்கும் ஏற்ற வகை அரிசி இதுவாகும். இந்த வகை அரிசிகள் தனித்துவம் கொண்டவை. குறிப்பாக, வாசனை மிகுந்ததும் ஆரோக்கியமானதும்கூட. அவ்வகையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்தச் சுழ்நிலையில் வாடிக்கையாளர்களிடமிருந்து எங்கள் அரிசி குறித்து நேர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன.

பலரும் அரிசியை சமைத்து அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாடு தழுவிய அளவிலுள்ள மைடின் பேரங்காடி கிளைகளில் இந்த முத்திரை அரிசிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதிலும் அந்த அரிசிகளுக்கு இப்பேரங்காடிகளில் தனி விற்பனை இடம் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் தொடர்ந்து பெரும் ஆதரவைப் பெற்றுவரும் இந்திராவேலி முத்திரை வகை அரிசிகள் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விலையிலும் விற்கப்படுவதாக மைடின் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சலிம் மைடின் முகமட் குறிப்பிட்டார். நேரடி விற்பனையைத் தவிர மைடின் ஆன்லைன், ஷோப்பி விற்பனைத் தளத்திலும் இந்திராவேலி வகை அரிசிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் அந்த அரிசிகளை எளிதாக வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here