தங்க நகைக்கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டவரை 24 மணி நேரத்துக்குள் கைது செய்த போலீஸ்

அலோர்ஸ்டார், அக்டோபர் 19:

நேற்று இங்குள்ள செபெராங் ஜாலான் புத்ராவில் உள்ள கொம்ப்ளெக்ஸ் ஸ்ரீ புத்ராவில், தங்க நகைக்கடை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள், ஒரு சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடை உரிமையாளரின் புகாரின் பேரில் உளவுத்துறை தகவல் மற்றும் விசாரணையின் விளைவாக மாலை 6.45 மணியளவில் 28 வயதான சந்தேக நபர் இங்குள்ள ஜாலான் ராஜாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக கெடா போலீஸ் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மமத் கூறினார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் மூலம் 16 வெள்ளி மற்றும் தங்க நிற வளையல்கள் மற்றும் பிளாஸ்டிக் கால்கள் மற்றும் பல்வேறு வடிவங்கள் வண்ணங்களிலான 52 மோதிரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

“மேலும் 65 வெள்ளி மற்றும் கருப்பு நெக்லஸ்கள், 15 கைச்சங்கிலிகள் (bangle chain), 25 ஜோடி மோதிரக் கற்கள் கொண்ட ஒரு பிளாஸ்டிக் கொள்கலன், ஒரு ஜேட் வளையல் மற்றும் ஒரு அடர் நீல நிற பை ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

“முதற்கட்ட விசாரணையில், சந்தேகநபர் பல்வேறு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் சம்மந்தப்பட்ட 17 முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் செவ்வாய்க்கிழமை (அக்.19) ஒரு அறிக்கையில் கூறினார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டப்பிரிவு 457 -ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் பிரம்படியும் வழங்கப்படலாம்.

“விசாரணைகளை உள்ளடக்கிய குற்றச்சாட்டு அறிக்கை, துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்படும்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here