பயன்படுத்திய கார்கள் விற்பனையாளரிடம் கார்களை விற்பதாக கூறி 158,000 மோசடி

குவாந்தான்: பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்வதாக கூறி ஒரு ஆடவர், பயன்படுத்திய கார் விநியோகஸ்தர்களிடம் 158,800 வெள்ளியை மோசடி செய்துள்ளதாக போலீசில் புகார் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரான கார் விநியோகஸ்தருக்கு காரை இன்னொருவரிடமிருந்து வாங்கி தருவதாக கூறி, இடைத்தரகராக செயல்பட்ட ஒருவர் ஹோண்டா (1), பெரோடுவா (2) மற்றும் தொயோட்தா (5) போன்ற வகையான எட்டு கார்களை வாங்கி தருவதாக கூறியே இப்பணத்தை ஏமாற்றியுள்ளார்.

பகாங் வணிக குற்ற புலனாய்வு துறை தலைமை கண்காணிப்பாளர் முஹமட் வசீர் முஹமட் யூசோஃப் கூறுகையில், விலை சலுகையினால் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்டவர், அந்த வாகனங்களை வாங்க ஒப்புக்கொண்டார்.

சந்தேக நபரின் சலுகையை ஒப்புக் கொண்ட பாதிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார் விநியோகிஸ்தர், சந்தேக நபரின் தனிப்பட்ட கணக்கிற்கு ஆன்லைன் பரிமாற்றம் மூலம் அவருக்கு பணம் செலுத்தினார்.

பாதிக்கப்பட்டவர் கடந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் வரை சந்தேக நபரின் கணக்கில் 12 பணப் பரிமாற்றங்களைச் செய்ததாக அவர் கூறினார்.

“எனினும், பாதிக்கப்பட்டவர் பணம் செலுத்திய பிறகு சந்தேக நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

“ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த பாதிக்கப்பட்டவர் நேற்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் (IPD) புகார் அளித்தார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here