சிங்கப்பூர், அக்டோபர் (21) :
ஒவ்வொரு வீட்டிற்கும் 10 ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (‘ஏ.ஆர்.டி’) கருவிகளை சிங்கப்பூர் அஞ்சல் சேவையினூடாக (SingPost) சிங்கப்பூர் சுகாதார அமைச்சு வழங்கவிருக்கிறது.
பொதுமக்களுக்குப் போதுமான ‘ஏ.ஆர்.டி’ கருவிகள் கிடைக்க ஏதுவாக, சனிக்கிழமைகளிலும் அஞ்சல்காரர்கள் அவற்றை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவர்.
சனிக்கிழமைகளில் ‘ஏ.ஆர்.டி’ கருவிகளை விநியோகிக்கும் பணியை மட்டுமே அவர்கள் மேற்கொள்வர் என்று சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது.
வீடுகளுக்கு ‘எஸ்டி பயோசென்சர் ஸ்டாண்டர்ட் கியூ கொவிட்-19 ஏஜி’ இல்லப் பரிசோதனைக் கருவிகள் விநியோகிக்கப்படும். இவை தென்கொரியாவில் இருந்து வரவழைக்கப்படுகிறது.
இக்கருவிகள் மூலம் 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். ‘ஏஆர்டி’ கருவிகளை அஞ்சல்மூலம் வீடுகளுக்கு அனுப்புவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது .