கோலாலம்பூர்: சிலாங்கூரில் நடத்தப்பட்ட நான்கு சோதனைகளில் 10 லட்ச வெள்ளிக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநகர துணை போலீஸ் தலைவர் டத்தோ யோங் லீ சூ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) செய்தியாளர் சந்திப்பில், பிரிக்ஃபீல்ட்ஸில் செயல்படும் போதைப் பொருள் விநியோக வளையத்தை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
அக்டோபர் 19 ஆம் தேதி, Ops Shadow என்று பெயரிடப்பட்ட சோதனை நான்கு தனித்தனி இடங்களில் நடத்தப்பட்டன. இதில் இரண்டு வளாகங்கள் போதைப்பொருள் இருப்புக்களாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜாலான் புக்கிட் பால்மாவில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இது ஒருவரை கைது செய்ய வழிவகுத்தது என்று அவர் கூறினார்.
பாங்கியில் உள்ள மற்றொரு குடியிருப்பு மற்றும் ஶ்ரீ கெம்பாங்கனில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டன. சுமார் 25.27 கிலோ மெத்தம்பேட்டமைன் மற்றும் 20.66 கிலோ ஹெராயின் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு RM1,174,200 ஆகும்.
31 வயதான சந்தேக நபர் அக்டோபர் 26 வரை தடுப்பு காவலில் வைக்கப்படுவார். அவரிடம் போலீஸ் எந்தவித அறிக்கையையும் பதிவு இல்லை. ஆனால் சிறுநீர் பரிசோதனையில் அவர் THC (டெட்ராஹைட்ரோகன்னபினோல்) உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுஎன்று அவர் கூறினார். சிண்டிகேட் கடந்த இரண்டு மாதங்களாக செயல்பட்டு வருவதாகவும், அதன் சந்தை முதன்மையாக கிள்ளான் பள்ளத்தாக்கிற்குள் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.