புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மாமாட் காலிட் காலமானார்

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மாமாட் காலிட்  இன்று நள்ளிரவு 12.30 மணியளவில்  சிலிம் ரிவர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 58.

இதை மலேசிய கலைஞர்கள் சங்கத்தின் (Seniman) பொதுச் செயலாளர் ஹபீஸ் நஃபியா உறுதிப்படுத்தினார். சிலிம் ரிவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவர் தஞ்சோங் மாலிமில் உள்ள Sarang Art Hub cafe சரிந்து விழுந்தார். அங்கு அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

இறப்புக்கான காரணம் தெரியவில்லை ஆனால் மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. திரைப்படத் துறையில் தனது நேரத்தைச் செலவழிப்பதைத் தவிர, அவர் 2016 இல் தஞ்சோங் மாலிமில் தொடங்கியSarang Art Hub cafe  உரிமையாளராகவும் உள்ளார்.

மமத், அல்லது அவரது உண்மையான பெயர் முகமது முகமது காலிட், ஒரு திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் பிரபல மலேசிய கார்ட்டூனிஸ்ட் (கேலி சித்திரம்) டத்தோ  முகமது நோர் காலிட்டின் இளைய சகோதரர் ஆவார்.

அவரது மிகவும் பிரபலமான படங்களான Zombi Kampung Pisang, Hantu Kak Limah, Rock and 18 Puasa di Kampong Pisang ஆகியவை நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு வகையின் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here