ஜோகூர் சுல்தானின் அறக்கட்டளைக்கு எல்பிஜே 100,000 ரிங்கிட் நன்கொடை

ஜோகூர் துறைமுக ஆணையம் (எல்பிஜே) சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் ஒய்எஸ்ஐஜே (YSIJ) அறக்கட்டளைக்கு 100,000 ரிங்கிட் நன்கொடையை வழங்கியது. மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் ,சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காந்தர் சமூகத் திட்டங்கள் மூலம் வாரந்தோறும் பல இன மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

ஜோகூர் சுல்தானை பின்பற்றி எல்பிஜே யும் ஆதரவு வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த அன்பளிப்பை தருவதாக அதன் தலைவர் ரோஸ்னான் ஃபத்லால் தெரிவித்தார். எங்களுக்குத் தெரிந்தபடி, ஒவ்வொரு வாரமும் ஜோகூரின் அனைத்து மக்களுக்கும் நன்கொடைகளை வழங்குவதில் ஒய்எஸ்ஐஜே முன்னெடுத்துள்ளது.

எனவே, எல்பிஜே திட்டத்தின் கீழ் நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம் என்று அவர் நேற்று இங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ரோஸ்னான் நன்கொடை காசோலையை ஒய்எஸ்ஐஜே (YSIJ )அறங்காவலர் குழு உறுப்பினர் டத்தோ அவின்டர்ஜிட் சிங்கிடம் வழங்கினார்.

ஒய்எஸ்ஐஜே தலைமை நிர்வாக அதிகாரி, ஃபஸ்லி சுஃபியான் லைலி மற்றும் எல்பிஜே பொது மேலாளர் கமருசாமான் முனாசிர் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கிடையில், அவின்டர்ஜிட் சிங் வழங்கப்பட்ட பங்களிப்பிற்காக எல்பிஜே வுக்குக்கு தனது பாராட்டை தெரிவித்தார்.

உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவ துவாங்கு சுல்தான் மற்றும் ஒய்எஸ்ஐஜே ஆகியோரின் எண்ணங்களை இந்த பங்களிப்பு உண்மையில் நிறைவேற்றும் என்றார் அவர். அதே நேரத்தில், மேலும் பல நிறுவனங்களும் தேவைப்படுபவர்களுக்கு உதவி புரிய பங்களிக்க முன்வர வேண்டும் என்று அவின்டர்ஜிட் சிங் வலியுறுத்தினார்.

செய்தி- கிருஷ்ணன் ராஜு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here