கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினரின் தந்தை காலமானார்

கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினர்  ரம்லி முகமட் நோர் மற்றும் ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை (Jakoa)) இயக்குநர் சபியா மொஹத் நோரின் தந்தை டத்தோ முகமது நோர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை (அக் 24) அதிகாலை காலமானார். வயது 87.

சிறுநீரகக் கோளாறுகள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயக் கோளாறு காரணமாக முகமது நோர் கெடாவில் உள்ள பாலிங் மருத்துவமனையில் அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவர் அருகில் உள்ள பெங்கலான் ஹுலு டோக் கோபெக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். திங்கள்கிழமை (அக் 25) பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது ரம்லி இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

1956 இல் பிரிட்டிஷ் சிறப்பு விமான சேவை (SAS) மூலம் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட Senoi Praaq பொது நடவடிக்கைப் படை திட்டத்தில் பணியாற்றிய  முதல் 10 பணியாளர்களில் முகமது நோரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here