இன்று 9 புதிய கோவிட்-19 திரள்கள் இனங்காணப்பட்டன, அவற்றில் 6 பணியிடங்களை உள்ளடக்கியது

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 27:

கடந்த 24 மணி நேரத்தில் 9 புதிய கோவிட்-19 திரள்களை சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று தெரிவித்தார்.

இனங்காணப்பட்ட திரள்களில் ஆறு பணியிடங்களில் உருவாகியுள்ளவை என்றும், ஏனையவை சமூகம் மற்றும் கல்வித் துறையை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார்.

கோலாலம்பூர், கெடா, சிலாங்கூர், பேராக் மற்றும் கிளந்தான் ஆகிய இடங்களில் இந்த திரள்கள் கண்டறியப்பட்டன என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here