கழிவு, சிக்கன விலையில் MYDIN பொருட்கள் விற்பனை

கோவிட்-19 நெருக்கடியால் நாடு பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த சில்லறை விற்பனைப் பேரங்காடியான மைடின் சிறப்புக் கழிவு விலையிலும் இரட்டிப்புச் சிறப்பு விலையிலும் பொருட்களை விற்பனை செய்யும் மைடின் எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமிர் அலி மைடின் தெரிவித்தார்.

இந்தச் சிறப்பு விலையில் பொருட்களை விற்கும் இயக்கம் 21.1.2022 வரை நீடிக்கும் என்று அவர் அறிவித்துள்ளார். உள்நாட்டு வர்த்தகப் பயனீட்டாளர் அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த இயக்கம் நடைபெறுகிறது. மலேசியப் பொருட்களை வாங்கும் இயக்கத்தின் வாயிலாக இந்த ஒத்துழைப்பை அமைச்சு வழங்குகிறது. நெஸ்லே, பிஅண்ட்ஜி, லக்ஸ், லைப்போய், சன்சில்க், கப்பால் அப்பி, சாஜி போன்ற 66 பிரபல பொருள் விநியோகிப்பு நிறுவனங்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளன.

மைடினின் பிரபலமான மின் வர்த்தகக் களமாகத் திகழும் ஷோப்பி மூலமாகவும் சிறப்புக் கழிவு முறையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவே பொருட்களை வாங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. வரும் அக்டோபர் 30ஆம் தேதி பிற்பகல் 2.00 மணி தொடங்கி 3.30 மணி வரை டிவி 3இல் மைடினின் இந்நிகழ்வு ஒளிபரப்பாகும். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு பொருட்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அதிகமான பொருட்களை வாங்கும் 40 பேருக்கு பரிசுகள் வெல்லும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். மூன்று மாதங்களுக்கு இந்தப் பரிசுப் பொருட்கள் வழங்கும் இயக்கம் நீடிக்கும். 40 பேருக்குத் தலா 900 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படும். அது மட்டுமன்றி இந்த இயக்கம் முழுவதும் பல்வேறு போட்டிகள் வாயிலாக வாடிக்கையாளர்கள் ஒரு லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை வெல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

சமுதாயத்திற்கு எங்களால் முடிந்த அளவு செய்யக்கூடிய வாய்ப்பாக இதனை நாங்கள் கருதுகிறோம் என்று டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமிர் அலி மைடின் தெரிவித்தார். தொழில் முனைவர்களும் வர்த்தகர்களும் மீண்டும் மீட்சி பெறுவதற்கு இது உதவும். அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கும் சிக்கன விலையில் பொருட்களை விற்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு கழிவு விலையிலும் சிக்கன விலையிலும் பொருட்களை விற்பனை செய்யும் இயக்கம் சுபாங் ஜெயாவில் உள்ள மைடின் பேரங்காடியில் நடந்தேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here