தங்கள் மகனுக்கு “ABCDEF GHIJK” என்று விநோதமாக பெயர் சூட்டிய தம்பதியர்

இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஜூஹ்ரோ – ஜூல்பமி என்ற தம்பதியர், தங்கள் மகனுக்கு வித்தியாசமான பெயரை வைத்துள்ளனர்.

ஆங்கில அகர வரிசை எழுத்துகளான, ‘ஏபிசிடிஇஎப் ஜிஎச்ஐஜெகே ஜூஜூ’ (ABCDEF GHIJK Zuzu) என பெயர் சூட்டி உள்ளனர். இதில் ‘ஜூஜூ’ என்பது பெற்றோர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்துகளாகும்.

12 வயதான அச்சிறுவன் பள்ளியில் தன் பெயரை எழுதிய போது ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கேலி செய்துள்ளனர். இது குறித்து தந்தையிடம் முறையிட்ட பின்னரே, அதுதான் உண்மையான பெயர் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், தங்களுக்கு அடுத்து பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் ‘என்ஓபிக்யூ’ (NOPQ), ‘ஆர்எஸ்டியூவி’ (RSTUV) போன்ற பெயர்களை வைக்க திட்டமிட்டுள்ளார்களாம் என்று கூறி ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here