கிள்ளானில் KLSICCI ஏற்பாட்டில் தீபாவளி பங்களிப்பு

நாம் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வேளையில் வசதி குறைந்தவர்களும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் KLSICCI தீபாவளி 2021 பங்களிப்பினை  நவம்பர் 1ஆம் தேதி MPklang E-Libraryயில் தமிழ் செல்வன் சுப்ரமணியம்@T.செல்வம் தலைமையில்,அனைத்து மாவட்டக் குழுவின் அமைப்புத் தலைவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கிள்ளான் மாவட்டக் குழுவின் துணைத் தலைவர் சேகரன், கிள்ளான் மாவட்டக் குழுவின் செயலாளர் யோகேஸ்வரி மற்றும் சமூக கடப்பாடு தலைவர் (CSR) பெளசியா பிபீ ஆகியோர் வழி நடத்தினார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதிராவ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்,
சார்லஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆர் ஜார்ஜ் , அமிசாம் பின் ஜமான், லியோங் டக் கீ , தென் கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP ஷம்சுல் அமர், கிள்ளான் லிட்டில் இந்தியா கிள்ளான் சிலாங்கூர் தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Velson Packaging Sdn Bhd, Sri Kumaran’s Silk Store, Bollywood Fashion, தொடர்ந்து Yashree Store, AVM Global Trading, Everest Aisvaram Sdn Bhd, Raaji Slik Palace sdn bhd, Sri Korakkar Hagro Product, Hare Krishna Textiles, Dutch Lady, AKPC Chetty’s, Gowri’s Textiles & Renusha  ஆகியோர் வழங்கிய பொருளதவியால் கிள்ளானை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட B40 குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருந்த KLSICCI தலைவர் டத்தோ R.ராமநாதன் மற்றும் EXCO உறுப்பினர்கள் மற்றும் KLSICCI கவுன்சில் உறுப்பினர்களுக்கும் இத்திட்டம் பெரும் வெற்றியடைய உதவிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here