உஷார்..! நினைவாற்றல் இழப்பை உண்டாக்கும் இந்த உணவுகளை தொடாதீர்கள்…

ரிபைன்டு கார்போஹைட்ரேட் உணவுகள், உடலுக்கு மிகவும் தீங்கானது. அவை உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து, செரிமான அமைப்பால் சர்க்கரையாக மாற்றப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.

டிமென்ஷியா எனும் மறதி நோய் நினைவாற்றல் வயதானவர்களிடையே பொதுவாக அதிகளவில் காணப்படும். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்காது. அவர்களால் சுயமாக முடிவெடுக்கவும் முடியாது.

மரபியல், வயது, வாழ்க்கை முறைகளுடன் தவறான உணவு முறையும் இந்த பாதிப்புக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. வளர்ந்து வரும் தலைமுறையினரிடமும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.

1. டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் : உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், ஊட்டச்சத்துக்கு மிக்க உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்தையும் உணவுகளால் மேம்படுத்த முடியும். சுவைக்காக உண்ணும் பதப்படுத்தப்பட்ட அல்லது ஆரோக்கியமற்ற உணவுகள் மனச்சோர்வை உண்டாக்கி, மன அழுத்தம் மற்றும் கவலைகளை உருவாக்க வல்லது.

இந்த உணவு பழக்கம் டிமென்ஷியா என்றும் நினைவாற்றல் இழப்புக்கும் வழிவகுக்கும். குறிப்பாக, கார்போஹைட்ரேட் நிறைந்த நொறுக்குத்தீனி பண்டங்களை சாப்பிடுவது, விரைவாக டிமென்ஷியாவை நோக்கி தள்ளும்.

கார்போஹட்ரேட் உணவுகள் : ரிபைன்டு கார்போஹைட்ரேட் உணவுகள், உடலுக்கு மிகவும் தீங்கானது. அவை உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து, செரிமான அமைப்பால் சர்க்கரையாக மாற்றப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது. அங்கு ஆற்றலை உற்பத்தி செய்ய இன்சுலின் உதவியுடன் செல்களுக்குள்ளும் நுழைகின்றன.

மற்ற கார்போஹைட்ரேட்டுகளைவிட ரிபைன்டு கார்போஹைட்ரேட்டுகள், ரத்தத்தில் விரைவாக குளுக்கோஸாக மாற்றப்பட்டு, சர்க்கரையின் அளவை கடுமையான ஏற்ற இறங்கங்களுக்கு வழிவகுக்கின்றன. இதனால், டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதுடன், டிமென்ஷியா பாதிப்பையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஆய்வு சொல்வது என்ன? மன நல ஆரோக்கியத்துக்கும், குளுக்கோஸின் பங்கு குறித்து நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. குளுக்கோஸ் அமைப்பில் ஏற்படும் சீரற்ற தன்மை மன நல ஆரோக்கியத்தை வெகுவாக பாதிப்பதாகவும், அத்தகைய நபர்களுக்கு டிமென்ஷியா பாதிப்பிற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
சர்க்கரை நோய் இல்லையென்றாலும், நினைவாற்றல் இழப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரத்தத்தில் இருக்கும் அதிகளவு சர்க்கரை, குளுக்கோஸில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கி டிமென்ஷியாவை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டிய உணவுகள் : அதிக கிளைசெமிக் அல்லது கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ரொட்டி, பாஸ்தா, பீட்சா, குக்கீஸ் போன்ற உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை விரும்பி சாப்பிட நேர்ந்தால் அதிக நார்சத்து மிக்க உணவுகள், காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
சிவப்பு இறைச்சி சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள். வறுத்த மற்றும் துரித உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டும். நாள்தோறும் குடிப்பதை கைவிட்டுவிடுவது ஆரோக்கியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here