மலாக்காவில் வேட்புமனு தாக்கல் காலை 10 மணியோடு நிறைவடைந்தது

மலாக்கா மாநில தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் காலை 10 மணியுடன் நிறைவடைந்தது. அடுத்த ஒரு மணி நேரம், ஒவ்வொரு வேட்புமனு மையத்தின் தேர்தல் அதிகாரியும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு முன், ஏதேனும் ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மாநிலத் தேர்தலுக்கான தங்கள் பெயர்களின் வரிசையைத் தீர்மானிக்க வேட்பாளர்கள் சீட்டு எடுப்பதையும் காணலாம். மாநிலம் முழுவதும் உள்ள 28 மையங்களிலும் வேட்புமனு தாக்கல் காலை 9 மணிக்கு தொடங்கியது.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20 என்றும், நவம்பர் 16 ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. மலாக்காவில் 28 மாநிலத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் 495,196 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.  254,666 அல்லது 51.43% பெண்கள் மற்றும் மீதமுள்ள 240,530 அல்லது 48.57% ஆண்கள் ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here