செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமாம் …. தெரிந்தால் இதை தவற விடமாட்டீர்கள் …

நாம் பழங்களில் அதிகம் சாப்பிடக்கூடிய பழம் வாழை பழம். இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. இருப்பினும் செவ்வாழை பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.

செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்களை என்ன முடியாது. வாழைப்பழத்தில் பல வகைகளில், சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்களில் அதிகளவு சத்துள்ளது செவ்வாழைதான்.

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.

இதனை சாப்பிடுவதனால் உடலுக்கு பலநன்மைகள் தருகின்றது. தற்போது செவ்வாழையை சாப்பிடுவதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து தினமும் தேவையான அளவு எடுத்து வந்தால் உங்களுக்கு மலசிக்கல், செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
  • செவ்வாழையில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உங்களுக்கு சிறுநீரக கற்கள், இரத்த அழுத்தம்,இருதய நோய், புற்று நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
  • தினமும் ஒரு செவ்வாழை பழம் உண்டு வருபவர்களுக்கு இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினை வராமல் தடுக்கும். நமது சருமம், முடி, மூட்டு மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது.
  • தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை, இரத்த குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
  • செவ்வாழையில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது.இதனை நீங்கள் உண்டுவந்தால் உங்களின் கண் ஆரோக்கியம்மேம்படும். மேலும் உங்களுக்கு பார்வை கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்பார்வை திறனை அதிகரிக்கும்.
  • உடல் எடை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையினை அதிகரிக்க விரும்புவார்கள் தினமும் இரண்டு செவ்வாழை பழத்தினை உண்டு வரலாம்.
  • செவ்வாழைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப தட்ப வெப்ப மாறுபாடுகளால் மனிதர்களிடையே உருவாகும் தொற்று நோய்க்கிருமிகளை கொல்லும் சக்தி இதற்கு உண்டு. எனவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் தினசரி ஒரு செவ்வாழைப் பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here