கெடாவிலுள்ள அனைத்து சுற்றுச்சூழல் பூங்காக்களும் தற்காலிகமாக மூடப்படுகின்றன; கெடா வனவியல் திணைக்களம் தகவல்

அலோர் ஸ்டார், நவம்பர் 10 :

கெடா மாநிலத்தில் வனவியல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் பூங்காக்களையும் மூடுவதற்கு அது முடிவு செய்துள்ளது.

கெடா வனவியல் திணைக்களத்தின் இயக்குநர் முஹமட் அப்துல்லா இதுபற்றிக் கூறுகையில், கடுமையான மழைப்பொழிவு காரணமாக இதனை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாங்கள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

“பொதுமக்களுக்காக சுற்றுச்சூழல் பூங்காக்களை தற்காலிகமாக மூடுவதாக நாங்கள் முடிவு செய்தோம், ஏனென்றால் மழை காரணமாக பூங்காக்களில் திடீரென நீர்மட்டத்தில் எழுச்சி ஏற்படும்,” என்று அவர் கூறினார்.

நேற்று புக்கிட் வாங்கிலுள்ள நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட நீர் எழுச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.

“புக்கிட் பெராங்கின் வனப்பகுதியில் அமைந்துள்ள புக்கிட் வாங் நகரில் நேற்று கனமழை பெய்ததை தொடர்ந்து அங்கு நீர் எழுச்சி சம்பவம் ஏற்பட்டது .

சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அப்பகுதியில் சுற்றுலா சென்ற 18 பேரையும் பாதுகாப்பாக மீட்டது. அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here