புத்ராஜெயா, நவம்பர் 11:
டெல்தாவின் ஆபத்தான மாறுபாட்டால் (பி.1.617.2) பாதிக்கப்பட்ட மேலும் 48 புதிய தொற்றுக்களை சுகாதார அமைச்சகம் (MOH) இன்று கண்டறிந்துள்ளது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இதுபற்றிக் கூறுகையில், ஒருங்கிணைந்த மருந்தியல் நிறுவனம் (iPROMISE) யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (UiTM) ஆகியவை நடத்திய தொடர்ச்சியான ஆய்வின் விளைவாக இந்த மாறுபாடு வெற்றிகரமாக கண்டறியப்பட்டது என்றார்.
“இது SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை VOC மற்றும் VOI என வகைப்படுத்திய தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கையை 3,830ஆக கொண்டு வருகிறது.
“இதுவரை கண்டறியப்பட்ட மொத்த தொற்றுக்களில், 3,810 தொற்றுக்கள் VOCகளுடன் தொடர்புடையவை என்றும் 20 தொற்றுக்கள் VOIகளாகும். அத்தோடு அவற்றில் 3,570 தொற்றுக்கள் டெல்தா வகையும் , ஏனைய 226 பேத்தா மற்றும் ஆல்பா வகைகளிலும் உள்ள தொற்றுகளாகும் என்றார்.
“இதற்கிடையில், VOI வகையில் மொத்தம் 13 தொற்றுக்கள் தேத்தா, கப்பா (4) மற்றும் ஈத்தா (3)” என்றும் அவர் கூறினார்.
இந்த மாறுபாடான வைரஸால் பாதிப்பு மூன்று மாநிலங்களை உள்ளடக்கியது, அதாவது பினாங்கு (34) , பகாங் (12) மற்றும் பெர்லிஸ் (2) ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டன என்றார்.