காணாமல் போனதாகக் கூறப்பட்ட பதின்ம வயது சிறுவனை முதலை சாப்பிட்டதாக நம்பப்படுகிறது

தஞ்சோங் மானிஸ், நவம்பர் 13 :

இங்குள்ள சுங்கை பாடோங் பாலாவில் கடந்த வியாழன் இரவு காணாமல் போனதாகக் கூறப்பட்ட பதின்ம வயது சிறுவனின் உடல், அவரது உடலின் பாதி மற்றும் இரண்டு கைகளும் காணாமல் போன நிலையில், கண்டெடுக்கப்பட்டது. மேலும் சிறுவனது உடலை முதலை தின்றுவிட்டதாக நம்பப்படுகிறது.

17 வயதான அலெக்ஸ் ரூடி ராய் அலியின் சடலம், அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட கடைசி இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், இன்று காலை 9.30 மணியளவில் கிராம மக்களால் மிதந்து கொண்டிருக்க கண்டுபிடிக்கப்பட்டது.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், அவர்கள் பாதிக்கப்படடவரின் உடலைக் கைப்பற்றி மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்றார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் முழுமையடையாத நிலையில், இடுப்பு கீழே இருந்தது மற்றும் அவரது இரு கைகளும் காணப்படவில்லை.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீயணைப்பு வீரர்கள் பலியானவரின் உடலை கைப்பற்றி, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் நண்பரின் சாட்சியத்தின் அடிப்படையில், கடந்த வியாழன் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் லாங்ஹவுஸ், ரூமா வுன் (Rumah Wun), பெகார்கோங், தஞ்சோங் மானிசிலுள்ள ஆற்றின் அருகே இருந்த படகுத்துறையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது பாதிக்கப்பட்டவர் எதுவும் பேசாமல் திடீரென தனது சட்டையை கழற்றியதுடன் தொடர்ந்து ஆற்றில் மூழ்கியபோது விசித்திரமாக நடந்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர் மூன்று நிமிடங்களுக்குப் பின்பும் ஆற்றின் மேற்பரப்பிற்கு தோன்றவில்லை என்பதை உணர்ந்த அவரது நண்பர்கள் இருவரும் அவரைத் தேடுவதற்காக ஆற்றில் குதித்தனர், ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன.

வியாழன் அன்று இரவு 11.11 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதற்கு முன்னர் நண்பர்கள் இருவரும் லாங்ஹவுஸில் வசிப்பவர்களுக்கு இந்த சம்பவத்தை தெரிவித்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது, ஆனால் மிக இருளாக இருந்ததால் நடவடிக்கை கடினமாக இருந்தது என்றும் தஞ்சோங் மானிஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) நான்கு உறுப்பினர்களை உள்ளடக்கிய நடவடிக்கைக்கு அக்கிராமவாசிகளும் உதவினர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here