ஈக்வடார் சிறையில் பயங்கரம்.. கத்திகள், ஆயுதங்கள் கொண்டு சண்டையிட்ட கைதிகள்.. 58 பேர் உயிரிழப்பு!

கிட்டோ: தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் க்யாகுல் நகரில் லிட்டோரல் பெனிடென்ஷியரின் என்ற பெயருடைய நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. இந்த் சிறைச்சாலையில் கைதிகள் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இதனால் அடிக்கடி இங்கு பலர் மரணமடைவது நிகழ்ந்து கொண்டே இருக்கும். கைதிகள் இடையே போதை மருந்து கடத்தல் குழுக்கள் அதிகாரப் போட்டி காரணமாக மோதல் அடிக்கடி நடந்து வருகிறது.

மிக கடுமையான மோதல் இந்த நிலையில் நேற்றும் லிட்டோரல் பெனிடென்ஷியர் சிறையில் கைதிகள் இடையே போதை மருந்து கடத்தல் குழுக்கள் அதிகாரப் போட்டி தொடர்பாக மிக கடுமையான மோதல் மூண்டது. நேற்று காலை தொடங்கிய பயங்கர சண்டை பல மணி நேரம் நீண்டது. துப்பாக்கிகள், கத்திகள் மூலம் கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

அதன்பிறகு போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கொடுரமான மோதலில் 58 கைதிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலோர நகரமான குயாகுவில் சிறைச்சாலைக்கு அருகில் வசிக்கும் மக்கள், சிறையில் இருந்து பல மணிநேரம் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர்.

வைரல் வீடியோ இந்த சம்பவத்தில் 10 கைதிகளும் காயமடைந்ததாகவும், அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். மோதலின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல உடல்கள் எரிக்கப்பட்ட நிலையிலும், தலை தூணடிக்கப்பட்ட நிலையில் கிடப்பதை போலவும் வீடியோ வெளியாகி வருகின்றன.

இது முதன்முறை அல்ல போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளிக்கும் தேசிய அவசரகாலச் சட்டத்திற்கு ஈக்வாடர் ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அக்டோபர் மாதம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் இந்த பெரிய மோதல் நடந்துள்ளது. செப்டம்பர் மாதம் இதே சிறையில் கும்பல் உறுப்பினர்களுக்கு இடையே நடந்த சண்டையில் குறைந்தபட்சம் 118 பேர் கொல்லப்பட்டனர். 79 பேர் காயமடைந்தனர்.

மக்கள் வேண்டுகோள் ”இது போதும். கொலையை எப்போது நிறுத்துவார்கள்? இது ஒரு சிறை, இறைச்சிக் கூடம் அல்ல, அவர்கள் மனிதர்கள்” என்று கொல்லப்பட்ட கைதிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ” ”ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ இன்னும் எதற்காகக் காத்திருக்கிறார்? ஈக்வடாரின் பாதுகாப்புப் படையினர் சிறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தயவு செய்து மக்கள் மீது கருணை காட்டுங்கள்” என்று பலர் வேதனையுடன் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here