அலார் ஸ்டார், நவம்பர் 17 :
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அக்டோபர் வரை கெடாவில் மொத்தம் 23 குழந்தைகள் கோவிட் -19 காரணமாக தங்கள் பெற்றோரை இழந்ததாக மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
மாநில பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு நலக் குழுவின் தலைவர் டத்தோ ஹலிமாத்தன் ஷாதியா சாத் கூறுகையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பதற்கான செயல்முறையை நலத்துறை எளிதாக்கியுள்ளது என்கிறார்.
சில அனாதரவற்றவர்கள் ஜித்ராவில் உள்ள தாமான் சின்னார் ஹராப்பன் மற்றும் சுங்கைப்பட்டாணி அனாதை இல்லங்களில் நலத் துறையின் பராமரிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“நலன்புரித் துறையானது குழந்தைகளின் தேவைகளை கவனித்துக்கொள்வதை உறுதிசெய்யும் வகையில் உணவு கூடைகளை வழங்கியுள்ளது, அக்குழந்தைகளுக்கு அவர்களின் உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தை நிர்வகிக்க ஆலோசனைகளை வழங்குவதையும் மேற்கொண்டுள்ளது,” என்று இன்று மாநிலத்தின் 2022 வரவு செலவுத்திட்டத்தின் விவாதத்தின்போது ஹலிமாத்தன் கூறினார் .
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கோவிட் -19 காரணமாக பெற்றோர்கள் இறந்த பின்னர், கெடாவில் அனாதையாக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலை குறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ பஹ்ரோல்ராசி முகமட் ஜவாவியின் (Pengkalan Kundor) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
மற்றொரு விஷயத்தில், தபுங் செஜாஹ்டெரா வனிதா கெடா (TSW) இன் கீழ் 934 பெண்களுக்கான RM467,000 ரொக்கப் பணம் நவம்பர் 28 ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என்றும் ஹலிமாத்தன் சபையில் தெரிவித்தார்.
“இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பெறுநர்கள் சிறு வணிகம் நடத்தும் பெண்களாவர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு முறை RM500 பண உதவியைப் பெறுவார்கள் என்றும் கூறினார்.