10 ஆண்டுகளில் 20 லட்சம் கைதிகள் விடுவிக்கப்பட்டு பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கிறது

2011 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 20 லட்சம் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று துணை உள்துறை அமைச்சர் இஸ்மாயில் முகமது சைட் இன்று மக்களவையில் தெரிவித்தார். சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கும் அவர்களின் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் பல்வேறு திறன்களை கற்றுத்தருவதாக அவர் கூறினார்.

நீண்டகால கைதிகள் விடுதலையானவுடன் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கு உதவுவதற்காக குறிப்பாக புனர்வாழ்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிறைத்துறை தனியாருடன் இணைந்து “ஸ்மார்ட் பார்ட்னர்ஷிப் திட்டத்தை” உருவாக்கி, விடுதலை செய்யப்பட்ட கைதிகளுக்கு உற்பத்தி மற்றும் பிற துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றார். விடுதலை செய்யப்பட்ட கைதிகள் அவர்கள் வாழ்ந்த சமூகத்தால் பாரபட்சமின்றி வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதே புனர்வாழ்வுத் திட்டங்களாகும்.

2011 ஆம் ஆண்டு முதல் விடுவிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை மற்றும் விடுவிக்கப்பட்ட பிறகு பாரபட்சமின்றி இயல்பு வாழ்க்கையை நடத்த அவர்கள் எடுக்கப்பட்ட முயற்சிகளை கேட்ட சிவகுமார் நாயுடுவுக்கு (PH-Batu Gajah) இஸ்மாயில் பதிலளித்தார். அமிருடின் ஹம்சா (Pejuang-Kubang Pasu) பரோலில் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here