இன்று முதல் சாலைப் போக்குவரத்துத் துறையின் “Ops Sedar ” நடவடிக்கை ஆரம்பம்

புத்ராஜெயா, நவம்பர் 24 :

இன்று முதல், நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) – Ops Sedar நடவடிக்கையை மேற்கொள்கிறது.

JPJ இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜைலானி ஹாஷிம் இதுபற்றிக் கூறுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சாலைத் தடைகள் மூலம் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இன்னும் பலர் வாகனக் காப்பீட்டுத் தொகையை செலுத்தத் தவறியதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

“Ops Sedar நடவடிக்கை செயல்படுத்தப்படும் போது , JPJ நேரடியாக சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் வகையில், நடமாடும் வசதிகளையும் வழங்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here