கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வரும் பிரபல முன்னணி நடிகை.. அட இவரா?

விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சி என்றால், அனைவருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது பிக் பாஸ் தான். முதல் நான்கு சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5 துவங்கியுள்ளது. 50 நாட்களை கடந்த ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால், சில தினங்களுக்கு முன் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனால் தொகுத்து வழங்க முடியாது என்று தெரியவந்தது.

கமல் ஹாசனின் இடத்தை யாரால் நிர்ப்பமுடியும் என்றும், பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஸ்ருதி ஹாசன் தான் கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் தொகுத்து வழங்குவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் கமல் ஹாசனுக்கு பதிலாக, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று தகவல் கூறுகின்றனர். ஸ்ருதி ஹாசனா..? ரம்யா கிருஷ்ணனா..?, இன்னும் இரு நாட்களில் பிக் பாஸ் 5 இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யாரென்று தெரியவந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here